Main Menu

முஹைதீன் அப்துல் காதர் பாராளுமன்றம் செல்ல அமீர் அலியின் திட்டமே காரணம்

89ல் தோற்கடிகப்பட்ட மொஹைதீன் மீண்டும் பாராளுமன்ற செல்வதற்கு திரைக்குப் பின்னால் அமீர் அலி மேற்கொண்ட திட்டமே காரணம்

Kuttiyan Ahmed Irshad

1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மூன்று ஊர்களுக்குமான இரண்டு வருட சுழற்சி முறையில் முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைமையுடன் எழுதப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான ஒப்பந்தத்துடன் ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா என மும்முனை பிரதேசங்களிலிருந்து களமிறக்கப்பட்ட ஹிஸ்புல்லா, மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதார், பசீர் ஆகியோர்களில் ஹிஸ்புல்லா அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற பாராளுமன்றக் கதிரையிலும் உட்கார்ந்தார்.

இரண்டு வருடங்களில் நிறைவில் எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி சுழற்சி முறையில் இராஜினாமாச்செய்து கல்குடாவிற்கு பாறாளுமன்ற பிரதிநிதித்துவ வாய்ப்பினை ஹிஸ்புல்லாஹ் கொடுக்க மறுத்ததினை அடுத்து, முஸ்லிம் காங்கிரசுடனும், தலைமை மர்ஹும் அஸ்ரபுடனும் முரண்பட்ட நிலையில், தொடர்ந்து வந்த 1994ம் ஆண்டைய பாராளுமன்றத்தேர்தலில் கல்குடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதர் முஸ்லிம் காங்கிரசினை எதிர்த்து ஒரு பொழுதும் கல்குடாவில் தனித்து நின்று வெற்றியடைய முடியாது என்ற நிலையை உறுதிப்படுத்தும் வகையில் படுதோல்வியடைந்ததுடன், மீண்டும் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றக் கதிரையில் உட்கார்ந்தார்.

இதனால் தொடர்ந்தேர்ச்சியாக 1989ம் ஆண்டு தொடக்கம் 1999ம் ஆண்டு வரை சுமார் 8 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமல் கைவிடப்பட்ட கல்குடா மக்கள் விடுதலைப்புலிகளின் கெடுபிடிகள் என ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் அரசியல் அதிகாரமில்லாத தலைமைகளின்றி அநாதையாக்கப்பட்ட மக்களாகவும், கேட்பார் பார்ப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறான கல்குடா மக்களின் அவலகரமான நிலையை கொழும்பிலிருந்தவாறு சமூக உணர்வுடன் சிந்திக்கத் தொடங்கிய அமீர் அலி எனும் இளைஞன் எப்படியாவது மீண்டும் முஸ்லிம் காங்கிரசிற்குள் மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரை உட்புகுத்தி கல்குடாவில் வேலி கட்டிய அரசியல் மூலம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை வென்றெடுக்க வேண்டுமென்ற சரியான திட்டமிடலுடன் திரைமறைவில் கல்குடா இளைஞர்கள், புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டளர்கள், அன்றைய உலமாக்களையும், சமூக சிந்தனையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வாழைச்சேனைப் பிரதேச போராளிகள், மொஹைதீன் அப்துர் காதரின் விசுவாசிகள் என பலதரப்பட்வர்களில் முக்கியமானவர்களை அடையாளங்கண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கத்தொடங்கினார்.

நீண்ட பயத்தின் முடிவில் பெருந்தலைவர் அஸ்ரப்பினை சமாதானப்படுத்தி, அவரை உடன்பாட்டுக்கு கொண்டு வந்து மீண்டும் மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரை கட்சிக்குள் உள்வாங்கி, அவர் வேட்பு மனுவில் கையழுத்து வைக்கும் வரைக்கும் தனது நண்பனும், அந்த காலகட்டத்தில் ஈரோசிலிருந்து மர்ஹும் அஸ்ரப்போடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் செயற்பட்டவரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்தினை மிகப்பெரும் ஆயுதமாக அமீர் அலி பயன்படுத்திய விதமானது, அவருக்கு இருந்த மிகப்பெரும் அரசியல் ஆளுமையின் உச்சத்தினையும், அரசியல் சித்தார்ந்தத்தின் சித்த விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களின் எதிர்பார்ப்பினை இவ்வாறுதான் வெல்வதென்பதற்கு மிகப்பெரும் உதராணமாகவே திரைக்குப்பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகளாக இன்று வரைக்கும் இருந்து வருகின்றது.

எவ்வாறு ஒரு சமூகத்தின் அரசியல் கட்டமைப்பினை சினிமாவில் காட்டுவதற்காக திரைக்குப்பின்னாலிருந்து வடிவமைத்து அதற்கு, கதை வடிவம் கொடுத்து, திறமையான நடிகர்ளினால் மக்கள் மனங்களில் பதிவைக்கப்படுமோ.! அதே போன்று முதிர்ச்சி பெற்ற ஓர் அரசியல் கலைஞனாக அமீர் அலி திரையின் பின்னாலிருந்து கல்குடா சமூகத்தின் அரசியல் கட்டமைப்பிற்குத் தேவையான சகலதையும் தோற்கடிக்க முடியாத திட்டங்களோடு மிகச்சாதுர்யமாக இயங்கிக்கொண்டிருந்தார்.

அவ்வாறான அவருடைய தியாகத்துக்கு கிடைத்த பரிசே மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரை மீண்டும் முஸ்லிம் காங்கிரசிற்குள் 1999ம் ஆண்டு உட்புகுத்தி பாராளுமன்றத்தேர்தலில் வெற்றியடைய வைத்த வரலாற்றினை முரண்பாட்டு அரசியலை அமீர் அலிக்கெதிராக தகுந்த காரணங்கள் ஏதுமின்றி ஆயுதமாகத் தூக்கிப்பிடித்து பூச்சாண்டி அரசியலும், சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களுக்கும் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எப்படியாவது கல்குடாவிற்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினையும் அதிகாரமிக்க அரசியல் தலைமையினையும் உருவாக்குவதே அமீர் அலியினுடைய அன்றையே நோக்கமாக இருந்தது.

அதற்கு ஓட்டமாவடியை மையப்படுத்தி தனக்கு பெருமளவிலான வாக்கு வங்கியினை வைத்திருக்கும் மொஹைதீன் அப்துர் காதரை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸூடாக களமிறக்குவதன் மூலமே முடியமென்ற திட்டத்தில் மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் செயற்பட்டார்.

அதற்காக கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி என்று பிளவுபட்டிருக்கும் கல்குடா மக்களை ஒருமுகப்படுத்தி ஒரே குடையின் கீழ் செயற்பட வைத்து, கல்குடாவில் வேலி கட்டிய அரசியலினை எவ்வாறு மேற்கொள்தென்ற திட்டமே அமீர் அலியின் மிகப்பெரும் சாதுர்யமான செயற்பாடாக காணப்பட்டது.

இவ்விடயமானது, கல்குடா சமூகம் சார்ந்த தூரநோக்கு அரசியல் சிந்தனையாக இருந்தாலும்.! அமீர் அலி தனது எதிர்கால அரசியல் கனவு சம்பந்தமாகவும்,  தனது வாழ் நாளில் நான் கல்குடாவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றக் கதிரையில் உட்கார்ந்தே தீருவேன் என்ற இலட்சியமாகவும் இருந்திருக்கலாம்.

ஆனால், கல்குடாவில் அன்று வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும், இன்றைய இளைஞர் சமூதாயத்துக்கும் மொஹைதீன் அப்துர் காதர் வேலிகட்டிய அரசியல் மூலம் பாராளுமன்றக் கதிரையில் 1999ம் ஆண்டு முதன் முதலாக உட்காருவதற்கு அமீர் அலியின் திரைக்குப்பின்னால் மேற்கோள்ளப்பட்ட அரசியல் செயற்பாடுகளும்,  நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட அன்றைய கல்குடாவின் அரசியல் செயற்பாட்டாளர்களும் தான் காரணமென்ற உண்மை தெரியாமலே இருந்து வருகின்றனர்.

அத்தோடு, மொஹைதீன் அப்துர் காதரை பின் நாட்களில் அமீர் அலி எதிர்க்கத்தொடங்கி இன்று வரைக்கும் அவ்வாறான செயற்பாடுகளும்,  அமீர் அலி எதற்காக அப்துர் காதரை எதிர்த்தார் என்பதற்கான காரணங்களும் கல்குடாவின் தேர்தல் மேடைகளில் பேசுபொருளாக எவ்வாறான அரசியல் நன்மை, தீமைகளுக்காக மாற்றப்பட்டுள்ளது என்பதனை தற்போதைய இளைஞர் சமூகம் தேடி அறிந்து கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகவுமுள்ளது.

பின் நாட்களில் அமீர் அலி எதற்காக மொஹைதீன் அப்துல் காதரை எதிர்க்கத் தொடங்கினார் என்ற உண்மை தொடரும்.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்



Comments are Closed