Main Menu

ரீ56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் ரீ.56 ரக துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் ரவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10.01.2020) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கல்மடு விநாயகபுரம் பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கடற்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்த பொலிசாரின் விசாரணையில் மற்றுமொருவர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் திகிலிவெட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைப்  பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவர்களிடமிருந்து ரீ.56 ரக துப்பாக்கியொன்றும் அதற்குப்பயன்படுத்தும் 27 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. போராளி என்றும், இவர்களுடன் தொடர்புபட்ட வேறு நபர்கள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed