Main Menu

ஓட்டமாவடியில் Eastern Aqua Services நிறுவனத்தின் புதிய காரியாலயத்திறப்பு விழா

மீராவோடை யாஸீன்
Eastern Aqua Services நிறுவனத்தின் புதிய காரியாலயம் கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை நேற்று  11.01.20120ம் திகதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

Eastern Aqua Services நிறுவனத்தின் உரிமையாளர் ரீ.எஸ்.ஷியாப் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி, இந்தியாவின் சீ.பி.எப்.நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு.ராஜ் மோகன், குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளர். டொனி பீரிஸ், ஸ்டார் அசோசியேட் நிறுவனத்தின் பணிப்பாளர் குகபரன், நெக்டா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், கல்குடா இறால் பண்ணை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



Comments are Closed