Main Menu

றியாழும், அமீர் அலியும் இணைய வேண்டும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

றியாழும், அமீர் அலியும் எதிர்காலச் சமூகத்துக்காக ஒரே கயிற்றில் பயணிக்க வேண்டியது கட்டாயம்.

Oddamavadi ahmed irshad

சமகால கல்குடாவின் அரசியலை எடுத்துக்கொண்டால் ஒரு பக்கத்தில் 15 வருட கால ஆளுமைமிக்க சிரேஸ்ட்ட அரசியல்வாதியாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கல்குடாவின் அரசியல் தலைமையாக இருந்து கொண்டிருக்க, மறுபக்கத்திலே அரசியல் தலைமைகளுக்கே கணக்குப்பாடம் சொல்லிக்கொடுக்கும் அதி திறமையான கல்விமானாக எதிர்த்தரப்பு அரசியலிலே கறைபடியா உத்தமன் எனும் பெயரோடு கணக்கறிஞர் றியால் கல்குடா அரசியலிலே கடந்த பாராளுமன்றத்தேர்தலில் இருந்து பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிட்டு அதில் றியால் தோற்கடிக்கப்பட்டு அமீர் அலி பாராளுமன்றம் சென்றிருந்தாலும், தனித்து நின்று ஒரு புதுமுக வேட்பாளராக களமிறங்கிய றியால் 9000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதனை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

அந்த வகையில், கல்குடாவில் சகோதரர் ரியாலுக்கு அளிக்கப்பட்ட 9000 வாக்குகளுக்கும் கிடைத்த சன்மானம் என்ன என்பது தான் இங்கு கல்குடா சமூகத்தால் எழுப்படும் மிகப்பெரிய கேள்வியாகும்.

சிறு வயது முதல் கல்வியிலும், மார்க்கத்திலும் நாட்டங்கொண்டவாரக தனது சொந்த ஊரினை விட்டு  தலைநகரில் உயர் கல்வியினை முடித்தவராக, இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய கம்பணிகளில் ஒன்றில் நிறைவேற்றுப்பணிப்பாளராகப் பணியாற்றிய றியால் தான் கடந்த 2015ம் ஆண்டைய பாராளுமன்றத் தேர்தலில் ஹக்கீமுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஆசனத்தினை வென்றெடுப்பதற்காக  கல்குடாவிலிருந்து போடுகாயாகத் தென்பட்டார் என்ற உண்மை எவராலும் மறுக்க முடியாது என்பது கல்குடா சமூகத்தின் தெளிவு.

நாட்கள் பல கடந்தாலும், தற்பொழுது அப்பாவியான றியால் கட்சி மற்றும் அதன் தலைமை  என்றால் என்ன? என்பதனை  நன்றாகவே விளங்கி வைத்துள்ளார்.  

அதற்கு அண்மையில் அவர்தனது முக நூலில் பதிவேற்றிய ஹக்கீம்,ரிசாட், திகா மூடிய அறைக்குள் கலந்துரையாடல் எனும் கருத்துக்கு சமூகத்தை இன்னும் பாதாளத்திற்குள் தள்ளி விடத்தான்  எனத்தெரிவித்திருந்தமை அதற்குமிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது.

இதிலிருந்து ஹக்கீமால் அல்லது முஸ்லிம் காங்கிரசினால் கல்குடாவிற்கோ அல்லது முஸ்லிம் சமூகத்துக்கோ எந்தப்பிரயோசனமும் இல்லை என்ற கருத்து வெளிப்பட்டுள்ளதோடு, அவர் முஸ்லிம் காங்கிரசில் பயணித்த அரசியல் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் அதன் சாராம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், எந்த விதத்திலும் றியாலுடைய அனுபவத்தின் வெளிப்பாட்டினை குறைத்து மதிப்பிட முடியாதென்ற வகையில் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியுடன் றியால் கைகோர்த்துச் செயற்பட முற்படுவாராயின், அல்லது தனக்கென இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களின் நடு நிலையான கருத்துக்களுக்கு செவிசாய்த்து ஒரே கயிற்றில் பயணிக்க எத்தனிப்பாராயின், அது எதிர்கால கல்குடா சமூகத்துக்குகிடைத்துள்ள வரப்பிரசாரமகாமும், மிகப்பெரும் வெற்றியாகவும் அமையுமென்பதில் கல்குடா மக்கள் இரண்டு கருத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இந்த நிலையில், கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலி தான் கடந்து வந்த 15 வருட அரசியல் பயணத்தில் ன்னால் விடப்பட்ட பிழைகளை ஒரு தடவை அசைப்போட்டுப் பார்க்க வேண்டுமென்பதும் இங்கே முக்கியமான விடயமாகவே உள்ளது.

ன்னை எதிர்த்து கடந்த தேர்தலில் களமிறங்கிய றியாலை எவ்வாறு அரவணைத்து, அவருக்குரிய கெளரவத்தினைக் கொடுப்பதோடு, எதிர்கால அரசியலில் அவருடைட வகிபாகம் அல்லது பங்கு என்னவென்பதை கல்குடா சமூகம் தெளிவடையும் வகையில் நம்பிக்கையுடன் உரியவர்களுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் ட்டாயத் தேவையாகவுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed