Main Menu

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா

இப்னு அஷாத் – நளீர் நபீஸ்
நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கடந்த 2020.01.09ம் திகதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி மு.கந்தசாமி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி கலாநிதி மு.சுதாகர் கலந்து சிறப்பித்ததுடன், விருந்தினர்களாக தமிழ்த்துறைத்தலைவர் ம.இரகுநாதன், சமூகவியல் துறைத்தலைவர் இ.இராஜேஸ் கண்ணன், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சோ.பத்மநாதன், இந்து தத்துவபீட விரிவுரையாளர் திரு செல்வ மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நூலினை பீடாதிபதி கலாநிதி ம.சுதாகர் வெளியிட்டு வைக்க, நூலின் முதற்பிரதி நூலாசிரியரின் பெற்றோருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தமிழியற்கழகம், தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“பிறைநிலவின் பெருங்கனவு” கவியாசிரியர் நிலாக்கவி நதீரா மூபின் 28 கவிதைகளை வியூகம் வெளியீட்டு மன்றமூடாக youthCeylon.com இணையதளத்தில் 2019ம் ஆண்டுக்குள் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.



Comments are Closed