Main Menu

றியல் விளையாட்டுக்கழகத்திற்கு வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி சீருடை அன்பளிப்பு

மாவடிச்சேனை றியல் விளையாட்டுக்கழகத்திற்கு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மியினால் சீருடை அன்பளிப்புச் செய்யப்பட்டது.

சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவடிச்சேனை றியல் விளையாட்டுக்கழகத்தின் தலைவராகச் சிறப்பாகச் செயற்பட்ட அவர், கழகத்தினை சிறப்பான முறையில் வழிநடாத்தி விளையாட்டுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் சமூகம் சேவைப்பணிகளிலும் முன்மாதிரிமிக்க கழகமாக வளர அயாரது பாடுபட்டார்.அத்துடன், இளம் சமூகத்தை விளையாட்டு மற்றும் சமூக சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இது வரை தான் வகித்து வந்த தலைவர் பதவியினை விட்டு விலகியமை முன்மாதிரிமிக்க நடவடிக்கையாகும்.

மாவடிச்சேனை றியல் விளையாட்டுக்கழகம் பிரதேச விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தினை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 17.01.2020ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கழகச்செயலாளர் எம்.எம்.எம்.அஸ்ரப் தலைமையில் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற றியல் விளையாட்டுக்கழகத்தின் நிருவாகத்தெரிவுப் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த கழகச்சீருடையை வழங்கி அறிமுக செய்து வைத்தார்.

றியல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான கே.எல்.இப்றாஹிம் (அஸ்மி) அவர்களின் பங்குபற்றுதலோடும் இராப்போசனத்துடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் கடந்த காலச்செயற்பாடுகள், விளையாட்டு ரீதியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அடைவுகள், விளையாட்டினையும் தாண்டி சமூக நன்னோக்கில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் கழகத்தின் கணக்கறிக்கை மற்றும் புதிதாகத் தெரிவு செய்யப்படும் நிருவாகத்தினர் செயற்பட வேண்டிய விதம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் இங்கு சிலாகிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கழகத்தின் புதிய தலைவராக நியூ டொப் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஏ.முஸம்மில், செயலாளர் ஏ.ஜி.எம்.அப்ராஸ், பொருளாளராக எம்.எச்,அஜ்மீர், உப தலைவராக எம்.எம்.எம்.றிஸ்பான், முகாமையாளர் எம்.அஸ்கர், கிரிக்கெட் தலைவர் ஏ.எம்.பஷீர், கிரிக்கெட் உப தலைவர் எம்.பைறூஸ் மற்றும் ஆலோசகர்கள் எம்.எச்.எம்.ஹரீஸ் (அதிபர்). எம்.எம்.அமீர் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), எம்.எஸ்.நெளபர், போசகராக றியல் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவரும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான கே.எல்.இப்றாஹிம் (அஸ்மி)  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். 



Comments are Closed