Main Menu

சம்மாந்துறையில் ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

பாறுக் ஷிஹான்

காணியொன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கியொன்று சம்மாந்துறைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (21) மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிவாரம் பகுதியிலிருந்து விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட குறித்த துப்பாக்கி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு உரப்பையினுள் சுற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி இயங்கு நிலையில் இல்லையெனவும் குறிப்பிட்ட துப்பாக்கியுடன் இரு ரவைக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed