Main Menu

காத்தான்குடியில் வாசிப்பும் அனுபவப்பகிர்வும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஒத்தாப்பு கலை இலக்கிய பெருவெளியும் காத்தான்குடி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்தும் பிரதிகள் மீதான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் 26.01.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

ஒத்தாப்பு கலை இலக்கிய பெருவெளியின் பிரதான செயற்பாட்டாளர் எம்.ரி.எம்.யூனுஸ் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில், நசீஹா முஹைதீன் எழுதிய அரிந்த ஆப்பிள் கோளங்கள், அன்வர் புஹாரி எழுதிய முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை கவிதைப்பிரதிகள் தொடர்பான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் இடம்பெறவுள்ளது.

பிரதிகள் தொடர்பான உரையினை க.தனிஸ்கரன், அப்துல் ஆபித், பஹ்மியா ஷெரீப், சலனி ஆகியோர் நிகழ்த்துவார்கள்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed