Main Menu

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலின் கெளரவிப்பு நிகழ்வு பாசிக்குடாவில்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து கடந்த வருடம் இடமாற்றம் மற்றும் ஓய்வுபெற்றுச் சென்றுள்ள 24 உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.

வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்விப்பணியகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் குடும்ப சகிதம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வி வலயத்தில் கடமையாற்றிய பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், பாட இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் இவ்வருடம் ஓய்வூதியம் மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளனர்.

இவர்களைக் கௌரவித்து சேவைநலன் பாராட்டும் நோக்குடன் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.

இதன்போது உத்தியோகத்தர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இங்கு சிறுவர்கள் உட்பட அனைவரும் கடல்குளித்து உல்லாசமாக பொழுதைக்கழித்தனர்.



Comments are Closed