Main Menu

கேரளா கஞ்சாவுடன் மூவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

சட்ட விரோதமான முறையில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட கேரளா கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை வாழைச்சேனை பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை -கொழும்பு வீதியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டதாகவும், இதற்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிறக்காரும் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மன்னார் பிரதேசத்திலிருந்து கல்முனைப் பகுதிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவை கைப்பற்றப்பட்டதாகவும், இதன்போது ஏழு கிலோ 625 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேக நபர்களையும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.



Comments are Closed