Main Menu

மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவுடன் இலக்கியச்சந்திப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடியைச்சேர்ந்த வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மூத்த எழுத்தாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் இலக்கியப்பயணம் தொடர்பிலான விஷேட சந்திப்பொன்று எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் நாவலடி இல்லத்தில் நடைபெற்றது.

எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் இலக்கியப்பயணத்தை நூல் வடிவில் கொண்டு வரும் முன்னெடுப்புக்களை மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம் மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடரில் எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவை நேரில் சந்தித்து அவரின் இலக்கியம், அரசியல் தொடர்பிலான பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்து கொள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் எழுத்தாளருமான ஏ.எம்.றியாஸ் (அம்ரிதா), நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் எழுத்தாளருமான சிராஜ் மசூர் மற்றும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



Comments are Closed