Main Menu

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர்

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் இன்று (12) கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) முதல்வர் ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்விலே ஏகமானதாக இவர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச்செயலாளராகவும், கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும், முன்னாள் நகரத்திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளராகவும் பதவி வகிக்கின்றார்.



Comments are Closed