Main Menu

அலி ஸாஹிர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய நுழைவாயில் திறந்து வைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானாவினால் கல்குடாப் பிரதேசத்தினை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் ஓரங்கமாக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயிலினைத் திறந்து வைக்கும் நிகழ்வும் சிறுவர் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று புதன்கிழமை அதிபர் A.G.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதேச சபை உறுப்பினர் A.L.A.கபூர் , ஏறாவூர் நகர சபை உறுப்பினர் A.S.M.ரியாழ், உயர்பீட உறுப்பினரும், தபாலதிபருமான A.நஸீர் ஹாஜி, கட்சியின் காவத்தமுனை பொறுப்பாளர் M.I.ரனீஸ், இணைப்பாளர்களான முன்னாள் அதிபர் A.C.M.சயீத் மற்றும் I.சபீக், பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Comments are Closed