Main Menu

அம்பாரை கரையோரங்களில் கடல் மாற்றம் : மீனவர்கள் பாதிப்பு

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்காரணமாக  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளது.

கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  நடாத்தி வரும் சூழ்நிலையில் வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும், நீரோட்டத்தின் தன்மையில்   ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும், தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்தி வரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தைச் செலவு செய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுவதாகக் குறிப்பிட்டனர்.


Comments are Closed