Main Menu

தென் கிழக்குப்பல்கலைக்கழக தென் மாகாண மாணவர்கள் கௌரவிப்பு

இப்னு அஸாத்
2018/2019 கல்வியாண்டிற்கு தென் மாகாணத்திலிருந்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத்தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2020.02.09) மாத்தறை இல்மா கல்லூரி பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென் மாகாண முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுடன், இதில் பிரதம அதிதியாக மாத்தறை நூரணியா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அக்ரம் நூறாமித் (Arkam Nooramith) அவர்கள் கலந்து கொண்டு “அறிவும் பண்பாடும்” இணைந்த கல்விச்சமுதாயத்தை உருவாக்குவதன் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார்.

மேலும், பிரதம வளவாளராக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைபீட புவியியல்துறை விரிவுரையாளர் எஸ்.றபீக்கா (S. Rafeeka) மற்றும் இல்மா கல்லூரியின் ஆசிரியை எம்.வை.என்.மாஷீதா (M.Y.N. Mazeedha) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக தென் மாகாண கல்வியமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் FEED நிறுவனத்தின் தலைவருமான எம்.கே.எம்.றஸ்மி (M.K M. Rasmy) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத்தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. தென் மாகாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed