Main Menu

தியாவட்டவான் காலித் பின் வலீத் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் வெற்றிக்கிண்ணம் அன்பளிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)
தியாவட்டவான் அறபா வித்தியாலத்தில் நேற்று (14) நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட இல்லத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை காலித் பின் வலீத் ஜும்ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தின் நிதி அனுசரணையுடன் பாடசாலை அதிபர் ஏ.எல்.இஸ்மாயில் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், காலித் பின் வலீத் ஜும்ஆப்பள்ளிவாயல் தலைவர் கே.பெளஸ்தீன், செயலாளர் ஐ.எம்.றிஸ்வான், உப தலைவர் அபுல் ஹஸன், பொருளாளர் ஹலால்தீன், பள்ளிவாயல் பேஷ் இமாம் நஜிமுதீன் ஆகியோருடன் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் ஏ.ஜீ.அஸீஸுல் றஹீம் (தியாவட்டவான் 210 C வட்டாரம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வெற்றிக்கேடயத்தை வழங்கிய ஜும்ஆப்பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கு பாடசாலை நிருவாகத்தின் சார்பாக அதிபர் தமது நன்றியினைத் தெரிவித்தார்.



Comments are Closed