Main Menu

தர்ஹா நகர் எம்.எப்.எம்.பஸ்ஹான் சமாதான நீதவானாக நியமனம்

எம்.ஜே.எம்.ஜாபீர்
களுத்துறை தர்ஹா நகரைச்சேர்ந்த எம்.எப்.முகம்மது பஸ்ஹான் அகில இலங்கை சமாதான நீதவானாக களுத்துறை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் தர்ஹா நகர் சாஹிரா பாடசாலை பழைய மாணவரும், காலி கிந்தொட்டை அல் பயான் அரபுக்கல்லூரியில் மெளலவி பட்டம் பெற்ற மார்க்கப்போதகரும், இங்கிலாந்து மேட்ரோ பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவத்துறையிலும்  பட்டம் பெற்றுள்ளார்.

புர்ஹான் சமூக சேவை அமைப்பின் தலைவரும் சமூக சேவையில் மிகவும் ஆர்வமாகவும் சிறப்பாகவும் தன்னை அர்ப்பணித்து வருபவருமாவார். இவர் முகம்மது புர்ஹான், சீனதுல் முனவ்வரா ஆகியோரின் மூத்த புதல்வருமாவார்.



Comments are Closed