Main Menu

காத்தான்குடி விபத்தில் ஓட்டமாவடி பாத்தும்மா மரணம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எச்.எம்.எம்.பர்ஸான் & மீராவோடை யாஸீன்
காத்தான்குடி-03, கடற்கரை வீதி, சிறுவர் பூங்கா முன்பாக வீதியைக்கடக்க முற்பட்ட பெண் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற இவ்விபத்து சம்பவத்தில் ஓட்டமாவடி-3, அஸ்கா பேக்கரி வீதியைச்சேர்ந்த பாத்தும்மா (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது குடும்பத்துடன் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு செல்லும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்துச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த வாழைச்சேனை – மாவடிச்சேனை பகுதியைச்சேர்ந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed