Main Menu

களுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் இறுதி நாள் போட்டி நிகழ்வுகள் கடந்த 13.02.2020ம் திகதி வியாழக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய பாடசாலையின் அதிபர் கே. சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக வாழைச்சேனை கோரலைப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லுரி தலைவர் கே. புண்ணிய மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டியின் நிகழ்ச்சியில் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளில் நீல நிற நாவலர் இல்லம் 535 புள்ளிகளைப்பெற்று சம்பியன் இல்லமாகவும் சிவப்பு நிற பாரதி இல்லம் 528 புள்ளிகளைப்பெற்று இரண்டாவது இடத்திலும் 495 புள்ளிகளைப்பெற்று பச்சை நிற விபுலாநந்தர் இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இதே வேளை, இல்ல அலங்கரிப்பு தொடர்பாக நடைபெற்ற போட்டியில் சிவப்பு நிறப்பாரதி இல்லம் முதலாமிடத்தையும் பச்சை நிற விபுலாநந்தர் இல்லம் நீல நிற நாவலர் இல்லங்கள் இரண்டும் சம அடிப்படையில் புள்ளிகளைப்பற்று இரண்டாம் இடங்களையும் பெற்றுக் கொண்டன.


Comments are Closed