Main Menu

உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எச்.எம்.எம்.பர்ஸான்)
உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியான சம்பவமொன்று இன்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச்செல்லும் போது, வாகரைப்பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்ததாகவும், சைக்கிளின் பின்பக்கத்திலிருந்து சென்றவரே விபத்தில் பலியாகியுள்ளார் என்றும் செலுத்தியவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விபத்தில் மரணமடைந்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் என்பவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed