Main Menu

மீராவோடை அமீர் அலி வித்தியாலய இல்ல விளையாட்டுபோட்டி இறுதி நாள் நிகழ்வு

மீராவோடை யாஸீன்
மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் மூன்றாவது இல்ல விளையாட்டுபோட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று  25.02.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை வித்தியாலய அதிபர் எம்.மஃறூப் தலைமையில் வித்தியாலயத்தின் முற்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, சிறப்பதிதிகளாக
பிரதி கல்விப்பணிப்பாளர்களான வீ.ரீ.எம்.அஜ்மீர், ஜே.தாஜூன்னிஷா, கோட்டக்கல்விப்பணிப்பாளர்.எம்.ஐ.அஃஷாப், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஆகியோரும் பள்ளிவாயல் தலைவர்கள், அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் அணிநடை, சங்கீதக்கதிரை, கயிறிலுத்தல் போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், சபா, மர்வா இல்லங்களைச்சேர்ந்த வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.



Comments are Closed