Main Menu

மட்டு. மாவட்டத்தில் தொழிற்சந்தை வழிகாட்டல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவுகோள் எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகம் மனிதவள மேம்பாட்டு திறன் அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் எஸ்கோ நிறுவனமும் இணைந்து இத்தொழில் வழிகாட்டும் சந்தையினை நேற்று (27) மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில் நடாத்தியது.

இச்சந்தை நிகழ்வுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி கோதை, தொழில்நுட்பக்கல்லூரி அதிபர்கள், தேசிய தொழிற்பயிற்சி கைத்தொழில் அதிகார சபை, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், தனியார் தொழில் வழங்குனர் தொழிலினைப் பெற்றுக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,
மனித வள மேம்பாட்டு அபிவிருத்தித் திணைக்கத்தினூடாகவும் தொழல்நுட்பக்கல்லூரிகளினூடாகவும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களினூடாகவும் பயிற்சிகளைப் பயிற்றுவித்து துறைசார்ந்த தொழில்களில் நியமிப்பதனூடாக வினைத்திறன் தொழிலினைச் செய்வற்கேதுவானவர்களாக இளைஞர், யுவதிகளை மாற்றியமைப்பது சாலச்சிறந்ததாகவே தான் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளை திறன் அபிவிருத்தியினை மேன்படுத்தி தனியார் துறைகளினுள் வேலைகளுக்கு அமர்த்துகின்ற ஓர் நிகழ்வாகவே இந்நிகழ்வு அமைந்திருந்தது. தனியார்த்துறையினர்களின் தொழில்நுட்பங்களில் தற்போது 547 வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும், அவைகளை இன்று வேலைக்கு உள்வாங்கி அவர்களின் வேலை அனுபவத்தினை மேம்படுத்தி தொழில் நியமங்களின் அடிப்படையில் தொழில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாரிய தொழில் நிறுவனங்களும் நடுத்தர சிறு நிறுவனங்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டு தங்களின் நிறுவனத்திற்குத் தேவையான தொழில் தகுதியுள்ள இளைஞர், யுவதிகளுக்காக தொழில் வழங்குவற்கு முன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர், யுவதிகளின் திறன் விருத்தியினை மேன்படுத்துவதற்கு தொழில் பயிற்சி நிறுவனங்களினூடாகவும் அரச தனியார் நிறுவனங்களினூடாகவும் பயிற்சிகளை வழங்குவதற்கு மனிதவள மேன்பாட்டுத்திணைக்களமும் மாவட்ட செயலகங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.



Comments are Closed