Main Menu

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் பிறைந்துறைச்சேனைப் பகுதியில் வயோதிபரின் சடலம் இன்று (21) சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி-1 பரிகாரியார் வீதியில் வசிக்கும் காசிம் அசனார் (கலீல்) வயது 60 என்ற வயோதிபரே வியாபார நிலையத்திற்கு முன்பாக சடலமாக அடையாளங்காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் பிறைந்துறைச்சேனை-மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி பகுதியிலுள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக சடலமொன்று காணப்படுவதாக பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வாழைச்சேனைப் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed