Main Menu

காத்தான்குடியில் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு வழங்க முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் 50 இலட்சம் கையளிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை, பூனொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து தெரிவு செய்த நாளாந்தம் கூலித்தொழில் செய்கின்ற தற்போது வீடுகளில் முடங்கிக்கிடக்கும் வசதியற்ற 4000 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகளை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் சுமார் 50 இலட்சம் ரூபாய் நிதியினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் வழங்கி வைத்தார்.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களும் இணைந்து பள்ளிவாயல்களினூடாகத்தெரிவு செய்யப்பட்ட 4000 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.



Comments are Closed