Main Menu

வறிய மக்களுக்கான கொடுப்பனவுகளை கரங்களுக்கு கிடைக்க வேலைத்திட்டம் – பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வறிய நிலையிலுள்ள மக்களின் கொடுப்பனவுகளை மக்களின் கரங்களுக்கு கிடைக்கும் வகையில் வியாழக்கிழமை முதல் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.

அந்த வகையில், சமுர்த்திக்கொடுப்பனவுகள் வழங்குமுகமாக மாஞ்சோலை மற்றும் ஓட்டமாவடி B/2 கிராம அதிகாரி பிரிவுகளில் சமுர்த்திக்கொடுப்பனவு பெறும் மக்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரினால் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படுகின்றது.

அத்தோடு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏனைய கிராம அதிகாரி பிரிவில் சமுர்த்திக் கொடுப்பனவுகள் பெறும் மக்களுக்கு அடுத்த கட்டமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சமூக சேவைத்திணைக்களத்தின் கீழியங்கும் முதியோர் மற்றும் பொதுசன மாதாந்த நிதியுதவி பெறும் மக்களுக்கான கொடுப்பனவுகள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அதிகாரிகளினால் வியாழக்கிழமை முதல் கரங்களுக்கு கி;டைக்கும் வகையில் வழங்கி வைக்கப்படுவதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மேலும் தெரிவித்தார்.



Comments are Closed