Main Menu

சம்மாந்துறை பிரதேச சபையினால் இலவச மாஸ்க் வினியோகம்

(எம்.எம்.ஜபீர்)
நாட்டில் அமுப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து மக்களின் சுகாதார நலனைக் கவனத்திற்கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய சந்தை, வியாபாரத்தளங்களுக்கு வருகை தந்த பொது மக்களுக்கும் மற்றும் முகக்கவசம் பயன்படுத்தாத வர்த்தகர்களுக்கும் இலவச முகக்கவசம் (மாஸ்க்) இன்று வினியோகிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் முகக்கவசம் (மாஸ்க்) வினியோகம் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூகத்தொண்டு அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கொரோனா தொற்று நோய் காலங்களில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.



Comments are Closed