Main Menu

திருட்டு முயற்சி தோல்வி : பொலிஸில் முறைப்பாடு

பாறுக் ஷிஹான்
கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபரின் காரியாலக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அயலவர்களின் உதவியினால் முறியடிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழைமை (25) பிற்பகல் பாடசாலையினுள்ளிருந்து வழமைக்கு மாறாக வந்த சத்தத்தை அவதானித்த அயலவர்கள், குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக அதிபருக்குத் தெரியப்படுத்தினர். இதனைதொடர்ந்து அதிபர், அபிவிருத்திக்குழு அங்கத்தினர் மற்றும் அயலவர்கள் துரிதமாகச் செயற்பட்டதன் காரணமாக திருட்டு முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிபர் காரியாலத்தினுள் பாடசாலை ஆவணங்கள், கணனிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க இலத்திரனியல் சாதனங்கள் காணப்பட்ட போதிலும், அவை களவாடப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வலயக்கல்வி அலுவலர் மற்றும் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு அதிபரினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் கொரோனா வைரஸிலிருந்து தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொண்டு வரும் இக்கட்டான சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், குறித்த பாடசாலைக்கு காவலாளி ஒருவரை வழங்கவும் சம்பந்தப்பட்டவார்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.



Comments are Closed