Main Menu

ஓய்வூதியம் பெறுவோருக்கு இராணுவத்தினர் உதவி

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்தில் ஊடரங்குச்சட்டம் அமுலிலுள்ள நிலையில், ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜகளை இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்துக்கு சபை பஸ்களினூடாக வங்கிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வந்து ஓய்வூதியப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டனர்

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினால் சிரேஷ்ட பிரஜைகள் சமூக இடைவெளியைப்பேணி முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான முறையில் பஸ்களில் வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டு வங்கியில் பணங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றியதுடன், மீண்டும் பஸ்களின் மூலம் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.

இதன் போது, சிரேஷ்ட பிரஜைகளின் வசதி கருதி வங்கிகள், அரச மருந்தங்கள், தனியார் மருந்தகங்ககள் அனைத்தும் திறக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவர்களுக்கு வங்கிச்சேவை, மருத்துவக்கொள்வனவும் இடம்பெற்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed