Main Menu

மாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவடிச்சேனைப் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தை கிணற்றினுள் வீசி கொலை செய்த பரிதாபச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளின் தந்தை செவ்வாய்கிழமை நள்ளிரவு இரண்டு மணியளவில் தனது வீட்டு கிணற்றில் தூக்கியெறிந்ததில் பிள்ளைகள் மரணமடைந்துள்ள சோகச் சம்பவமானது குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இரண்டு மணியளவில் பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் ஓடி வந்து, கிணற்றிலிருந்து பிள்ளைகளை மீட்கும் போது பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு பின்னர் இரண்டு பிள்ளைகளின் சடலமும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த நாற்பது வயதுடை தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed