Main Menu

கிணற்றினுள் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயலில் நல்லடக்கம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

தகவல் A பெளசுல்
கடந்த 14.04.2020ம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கிணற்றினுள் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் இன்று 17.04.2020ம் திகதி வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்பட்டைக்கப்பட்டு, மாலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் நல்லடக்கம் இடம்பெற்றது.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளுமே தந்தையால் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டுக்கிணற்றில் தூக்கியெறிப்பட்டு, உயிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தினம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜனாஸாக்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையிலேயே இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed