Main Menu

கல்குடாவில் அரிசி அரசியலுக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி : சட்டத்தரணி றிபானின் ஆதரவாளர்கள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
ஒரு நாள் அரிசி மூட்டைக்காக எமது உரிமையை அடகு வைக்க முடியாது. சட்டத்தரணி ஹபீப் றிபானுக்கு மாத்திரம் வாக்களித்து வெற்றி பெற வைப்போம்.

இவ்வாறான முகநூல் பின்னூட்டங்கள் கல்குடாத்தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரான ஹபீப் றிபானின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அசீம் ஹனீப் பகிரங்கமாகத் தெரிவித்திருப்பானது, மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வட்டத்துக்குள்ள பலத்த போட்டியினைத் தோற்றுவித்துள்ளதாகவே மாவட்டத்தில் பரவலாகப் பேசப்படுகின்றது.

கல்குடாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு மத்தியில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அரிசி மூடைகளைக் கொடுத்து கல்குடாவின் வாக்குகளைச் சிதறடிப்பதினால், சட்டத்தரணி றிபானுடைய வெற்றி வாய்ப்பு கை நழுவிப்போகலாமென்ற ஆதங்கத்திலே றிபானுடைய அரசியல் செயற்பாடாளர்களும் ஆதரவாளர்களும் ஹாபிஸ் நசீருக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகளில் குதித்துள்ளமை தெளிவாகின்றது.

ஆனால், மறு பக்கத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மற்றுமொரு ஏறாவூரின் வேட்பாளருமான அலி ஷாஹிர் மெளலானாவின் செயற்பாடுகளும் தேர்தலையொட்டியிய பரவலான வியூகங்களும் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மத்தியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றது. இருந்தும், மெளலானவுக்கெதிரான கருத்துக்களைத் தெரிவிக்காமல், றிபானுடைய ஆதரவாளர்கள் மெளனம் காப்பது, பல கோணங்களில் சந்தேகங்களை எழுப்புகின்ற விடயமாகும்.

எவ்வாறாயினும், ஹாபிஸ் நஸீர் அஹமத்தின் ஆதிக்கத்தினையும், அரிசி பேக்கு கலாசாரத்தினையும் கல்குடாவில் அனுமதிக்கப் போவதில்லையென்ற திடமான முடிவில் சட்டத்தரணி றிபானுடைய செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் களத்தில் குதித்துள்ளமை தெளிவான விடயம்.

இருந்தும் தான் முதலமைச்சராகப்பதவி வகித்த காலத்திலிருந்து கல்குடாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு மத்திலும் செல்வாக்குள்ளவராக காணப்படுகின்றார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed