Main Menu

“Thehotline இன் சுட்டிகளின் குட்டிக்கதைகள்” இறுதி வெற்றியாளர்கள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

அள்ளிக்கொஞ்சும் மழலைச்செல்வங்களின் அட்டகாசமான பேச்சுக்களுக்கு களமமைத்துத் தரும் நோக்கில் Half Moon Tours and Travels அனுசரணையில் kmf srilanka மற்றும் www.thehotline.lk இணையத்தளம் இணைந்து நடாத்திய “Thehotline இன் சுட்டிகளின் சுட்டிக்கதைகள்” நிகழ்ச்சிக்கு காணொளிகளை அனுப்பி வைத்த அனைத்து பெற்றோர்கள், உறவினர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

எமது வேண்டுகோளையேற்று சுமார் 70 சின்னஞ்சிறுசுகளின் காணொளிகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அத்தனை சிறுசுகளும் தங்களது திறமைகளை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டிருந்தமை சிறப்புக்குரியது. இவ்வாறு மறைந்து கிடந்த திறமைகளை வெளிக்கொணர www.thehotline.lk இணையத்தளமும் களமாக அமைந்ததையிட்டு பெருமையடைகிறோம்.

அதே நேரம் எமது நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியோருக்கும் குட்டிகளின் நிகழ்ச்சிகளை பார்த்து, ரசித்து, பகிர்ந்து கொண்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, இது எமது ஆரம்ப நிகழ்ச்சி என்பதால் தவறுகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. அதனையும் பெருமனதுடன் ஏற்றுக்கொண்டு, தங்களது ஆலோசனை, அறிவுரைகளை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

எமது போட்டிக்கான கால எல்லை 05.05.2020ம் திகதியிலிருந்து 15.05.2020ம் திகதியுடன் நிறைவடைந்தமையால் அதன் பின்னர் அனுப்பப்பட்ட காணொளிகளை போட்டியில் இணைத்துக் கொள்ள முடியாமல் போனமைக்கு வருந்துகிறோம்.

போட்டிக்கு அனுப்பப்பட்ட 70 காணொளிகளும் சிறப்பாக அமைந்திருந்தாலும், போட்டி என வருகின்ற போது முதலிடம் பெறும் மூவரை மாத்திரமே எம்மால் தெரிவு செய்ய வேண்டிய நிலையிலுள்ளோம். ஆகையினால், எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளிலிருந்து மிகப்பொருத்தமானவற்றை எமது குழுவினர் செய்துள்ளனர்.

முதலாமிடம் (5000 ரூபாய் பணப்பரிசு)

காணொளி : 43
AM. Eshaal,
Ambathenna.

https://www.facebook.com/watch/?v=3025152394240109

இரண்டாமிடம் (3000 ரூபாய் பணப்பபரிசு)

காணொளி : 02
MA.Nazhath Nima,
Meeravodai – 04

https://www.facebook.com/watch/?v=2797358393924354

மூன்றாமிடம் (2000 ரூபாய் பணப்பபரிசு)
காணொளி : 44
S.Dilan
Trincomalee

https://www.facebook.com/watch/?v=258576045338234

தெரிவு செய்யப்பட்டடோர் தங்களது கணக்கிலக்கத்தை எமது வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு அனுப்பி பணப்பரிசினைப் பெற்றுக்கொள்ளலாம்.

0094 77 832 7822
00974 5576 2242

அனுசரணை வழங்கிய Half Moon Tours and Travels நிறுவனத்திற்கு நன்றிகள்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed