Main Menu

சதாம் சுப்பர் மார்க்கட் குழுமத்தின் முன்மாதிரி : பிரதேச சபை ஊழியர்களுக்கு உலருணவு விநியோகம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபையில் பணி புரியும் ஊழியர்களுக்கு வாழைச்சேனை சதாம் சுப்பர் மார்க்கட், வெல்கம் பூட் சிட்டி மற்றும் வெல்கம் சொப்பிங் மோல் ஆகிய குழுமத்தைச்சேர்ந்த எம்.எம்.ரபியுல்தீன் மற்றும் அவரது சகோதரர்களால் நேற்று திங்கள்கிழமை உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது, கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதோடு, சபையில் வேதனமில்லாமல், தற்காலிக மற்றும் நிரந்தர ஊழியர்களாகக் கடமையாற்றும் ஒரு தொகுதியினருக்கு இவ்வுலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed