Main Menu

கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல் கூட்டமைப்பு பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காலிகமான சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் எமது பிரதேச பிரதேச மக்களின் செயற்பாடுகளும் பெண்களின் நடவடிக்கைகளும் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில் கேட்டுக் கொண்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா தொற்றுள்ள இக்காலப்பகுதியில் மாற்றின தமிழ், சிங்கள, கிறிஸ்தவ சமூகம் தத்தமது பெருநாட்களை தமது வீடுகளுக்குள் அமைதியாகக் கொண்டாடி கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கியுள்ள அதே சமயம், எமது மக்களும் அவ்வாறான ஒத்துழைப்புக்களை இப்பெருநாள் தினத்தில் வழங்க வேண்டும்.

இந்நிலையினைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு பின்வரும் வேண்டுகோள்களை வினயமாக முன்வைக்கின்றது.

வீதிகளிலும் கடைத்தெருக்களிலும் வேறு பிரதேசங்களிலும் புத்தாடைக் கொள்வனவுக்காக நடமாடுவதை, குறிப்பாக பெண்கள் தவிர்ந்து கொள்ளல்.

கடை உரிமையாளர்கள் கூட்டங்கூட்டமாக பொது மக்களை கடைகளுக்குள் அனுமதிக்காது, சமூக இடைவெளியைப்பேணி, சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றல்.

எனவே, இக்காலப்பகுதியில் கட்டுப்பாட்டுடனும் சுகாதார விதி முறைகளைப்பேணி வாழ்வதற்கும் தேவையற்ற கொள்வனவுகளைக் குறைத்து, அவற்றை ஏழை, எளிய மக்களுக்கு தர்மம் செய்து இம்மாதத்தை கண்ணியப்படுத்தி நடந்து கொள்ளல்.

எதிர்வரும் நோன்புப்பெருநாள் காலங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்ந்து, நாட்டுக்கு முன்மாதிரியாக அமைதியான முறையில் வீடுகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி மார்க்க வரம்புகளைப் பேணி அனுஷ்டித்தல் வேண்டுமென மேற்படி அறிக்கையில் கல்குடா பிரதேச முஸ்லிம் மக்களைக்கேட்டுக் கொண்டுள்ளது.

சம காலப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை முன் கொண்டு செல்லும் நோக்கில் பலம் வாய்ந்த அமைப்பொன்றின் அவசியத்தேவையைக் கருத்திற்கொண்டு, ஒன்றித்துச் செயற்படும் நோக்கோடு கல்குடா பிரதேசத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜூம்ஆப் பள்ளிவாயல்களின் தலைவர்களும் ஒன்றிணைந்து கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சமூகப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை நடைமுறைப்படுத்தும் அதே வேளை, இன்றைய கொரோனா தொற்றுள்ள காலப்பகுதியில் பொது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எதிர்நோக்கியுள்ள நோன்புப்பெருநாளை எவ்வாறு மாற்று மத சகோதரர்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டாட வேண்டும்? என்பன தொடர்பில் அனைத்து ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர்களும் ஒப்பிட்டு பிரதேச பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிகளூடாக மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளது.

தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பு:
பொது நன்மை கருதி கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க நாம் இட்ட செய்தி மாற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed