Main Menu

காரைதீவுக்கடல் சீற்றம் : ஊருக்குள்ள புகுந்த கடல் நீர் : மீனவ உபகரணங்கள் சேதம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் கடல் சீற்றம் காரணமாக 100 மீட்டர் தாண்டி கடல் நீர் புகுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் சக பிரதேச சபை உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறிப்பாக, கடலோர வீதியைத்தாண்டி ஊருக்குள் கடல் நீர் செவ்வாய்க்கிழமை (19) முற்பகல் உட்புகுந்துள்ளது. இதனால் மீனவர்களின் வலைகள், தோணிகள் என்பன 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கிடந்தன. இதனை காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சக பிரதேச சபை உறுப்பினர்களும் கேள்வியுற்று சம்பவ இடத்திற்குச்சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டனர். குறித்த பிரதேசத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து பள்ளமான இடத்தில் தேங்கிக் காணப்படுவதுடன், கடலிலிருந்து 65 மீற்றர் அப்பால் போடப்பட்டுள்ள எல்லை கல் வரை கடல் மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed