Main Menu

கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் ஒன்றியத்தின் ஊடக அறிக்கைக்கு கண்டனம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.ரீ.எம்.பாரீஸ்
கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் ஒன்றியம் எனும் பெயரில் ஒரு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கல்குடா முஸ்லிம் பெண்கள் கட்டுப்பாடின்றி செயற்படுபவர்களாகக் காண்பிக்கும் வகையில் கருத்தாடல்கள் கையாளப்பட்டுள்ளது. இதனை ஊடகங்களில் வெளியிட்டு இலங்கை வாழ் மக்களிடையே கல்குடா முஸ்லிம் பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அச்செய்தி தலைப்பிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையினை பயங்கரவாத மக்கள் எதிர்ப்புப்பேரவையின் தலைவரும் சிவில் சமூகஸ்ஹ் செயற்பாட்டாளருமான எம். ஐ.எம்.ஹில்மி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அவரின் கண்டன அறிக்கையில்,
கல்குடா ஜும்ஆப்பள்ளிவாசல் கூட்டமைப்பும் சமூக ரீதியான சமகாலப்பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாத
சிந்தனையற்ற அமைப்பாகவுள்ளதுடன், இவ்வாறான சமூக ரீதியிலான தாக்கத்தைச் செலுத்தும் செய்தியின் பாரதூரம் புரியாமல் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கும் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இங்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலும் செய்தியிலும் குறிப்பிடப்பட்டது போல் கல்குடா முஸ்லிம் பெண்கள் கட்டுப்பாட்டை மீறி, மார்க்கத்துக்கு முரணாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் வீதி வீதியாய் அலைந்து திரிகிறார்கள் என்பதில் எந்தவித உண்மையுமில்லை. ஆண் துணையற்ற குடும்பத்தைச்சுமக்கும் ஒரு சில பெண்கள் தன் குழந்தைகளுக்கு ஏதோ தன்னால் முடிந்தளவில் கையிருக்கும் பணத்தில் எமது பிரதேசத்திலிருக்கும் ஆடை நிறுவனங்களுக்குச் சென்றிருக்கலாம்.

வைரஸ் தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு இதனைத்தடை செய்ய வேண்டுமென்றால், இக்கூட்டமைப்பு பிரதேசத்திலுள்ள வியாபார நிறுவனங்களிடம் பெண்களுக்கு வியாபாரம் செய்யத்தடையுத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அவ்வாறு வலுவான அமைப்பாக இருந்திருக்க வேண்டும் அல்லது வர்த்தக சங்கம், வியாபாரிகள், பிரதேச சபை போன்றோருடன் கலந்துரையாடி எட்டப்படும் முடிவாக மக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும்.

இதை விடுத்து, கல்குடா பெண்கள் ஏதோ கண்ணியம், சமூகக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் போல சித்தரித்து அறிக்கை விட்டு, உலகம் பூராவும் பரப்பும் செயல் கவலையளிப்பதாகவும், அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவ்வறிக்கையினை மீளப்பெற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed