Main Menu

திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தினால் இரத்ததான முகாம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (19) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேப்பையடி வைத்தியசாலையில் சமூக இடைவெளியைப் பேணியவாறு இரத்ததான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இவ்விரத்ததானப் பணியில் குருதிக்கொடையாளர்கள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இதனை ஏற்பாடு செய்தவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் அவசர கால நிலமைகளில் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக குருதித்தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்யும் சிறு முயற்சியாகவே நாம் மீண்டுமொரு இரத்ததான முகாமை சமூக இடைவெளியைப் பேணி ஒழுங்கமைத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி Dr.ஜெ.மதன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. என்.ரமேஷ், நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed