Main Menu

கல்குடா ஜூம் ஆப்பள்ளிவாயல்களின் கூட்டமைப்பு விடுக்கும் மறுப்பறிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.ரீ.எம்.பாரிஸ்
கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல்களின் கூட்டமைப்பு எமது பிரதேச சுகாதார ரீதியான பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு ஏனைய சமயத்தவர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்மாதிரியாக நமது கல்குடா முஸ்லிம் பிரதேச மக்களும் திகழ வேண்டுமென்ற நோக்கின் அடிப்படையில் கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல்களின் கூட்டமைப்பு நான்கு அம்சங்களை முன்வைத்து மக்களிடம் வேண்டுகோளினை முன் வைத்திருந்தது.

இருப்பினும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில சொற்பிரயோகங்கள் விமர்சனத்தை உருவாக்கியுள்ளதுள்ளதுடன், சில ஊடகங்கள் அந்த அறிக்கையினை மையமாகக்கொண்டு தலைப்பிட்ட விதம் எமது பிரதேச பெண்களை தவறாகக் காண்பிக்கும் வகையில் கட்டம் இடப்பட்டுள்ளது.

கொரேனா பாதிப்பிலிருந்து எமது நாடு முழுமையாக விடுபடாத இக்கால சூழ்நிலையில் நாட்டு மக்கள் வைரஸ் தாக்கம் குறித்து கவலையடைந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாம் புனித நோன்புப்பெருநாளை எதிர்கொண்டிருக்கின்றோம்.

இப்பெருநாளை அரசாங்கம் மற்றும் சுகாதாரத்தரப்பினர் அறிவுறுத்தும் வகையில் வீடுகளிலிருந்து கொண்டாடவேண்டும். இந்நிலையில்ம் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும் கருத்திற்கொள்ளாத சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

இதனைக்கருத்திறகொண்டு கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல்களின் கூட்டமைப்பு பெருநாள் ஆடைக்கொள்வனவு மற்றும் ஏனைய பொருட்கொள்வனவு நடவடிக்கைகளுக்காக மக்கள் குறிப்பாக, பெண்கள் கடைத்தெருவுக்கு கூட்டங்கூட்டமாகச் செல்வதனைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையில் எமது சமூக நன்மை கருதி பொது மக்களிடம் நாம் விடுத்த வேண்டுகோளினைப் புரிந்து கொள்ளாமல் தவறான கண்ணோட்டத்தில் விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இவ்விடயம் குறித்து நாம் கவலையடைகின்றோம். மேலும், கல்குடா முஸ்லிம் மக்களிடம் நாம் வினையமான ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். தொடர்ந்தும் கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல்களின் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும்.

இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் சுகாதாரத்தரப்பினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவர்களால் மேற்கொள்ளப்படும் அறிவுறுத்தலுக்கமைவாகச் செயற்பட்டு எதிர்வருகின்ற நோன்புப் பெருநாளை நமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டாடுமாறும் மிகத்தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கல்குடா ஜூம்ஆப்பள்ளிவாயல்களின் கூட்டமைப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed