Main Menu

சமூக அக்கறையுள்ள இளைஞர்களின் “Help Dress – ஏழைகளுக்கு உடையளித்தல்” திட்டம் வெற்றி

இந்த செய்தியைப் பகிர்க >>>

சமூக அக்கறையுள்ள இளைஞர் குழுவொன்றின் சிந்தனையில் உருவான “Help Dress – ஏழைகளுக்கு உடையளித்தல்” திட்டம் நேற்று 20.05.2020ம் திகதியுடம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

சமூக அக்கறையுள்ள இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த Help Dress – ஏழைகளுக்கு உடையளித்தல் எனும் சமூக நலத்திட்டத்தினூடாக கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் ஆடை தேவையுடைய வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாவிக்கப்பொருத்தமான ஆடைகளைப்பெற்று, தேவையுடையோருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், பலரது வரவேற்பைப்பெற்றதுடன், பலரும் தம்மாலான பங்களிப்பினை பல்வேறு வகைகளில் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நூறு பயனாளிகளுக்கு மாத்திரம் ஆடைகள் வழங்குதல் எனும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினூடாக சுமார் 222 குடும்பங்களைச்சேர்ந்த 465 பயனாளிகளுக்கு ஆடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதில், பதினாறு நன்கொடையாளிகளிடமிருந்து சுமார் 158,728.00 ரூபாய் பணமாகவும், பன்னிரெண்டு பேரிடமிருந்து 468,805.00 ரூபாய் பெறுமதியான புதிய ஆடைளுமாக மொத்தமாக 627,533.00 ரூபாய் பெறுமதியான புதிய ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டத்திற்கு பணம் உதவி, புதிய மற்றும் பழைய ஆடைகள் வழங்கிய சகோதரர்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுமார் 18 இளைஞர்களுக்கும் ஆடைகளைச் சேர்த்தல், தரம் பிரித்தலுக்கு உதவியோருக்கும், இட வசதிகளை வழங்கியோர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

பயனாளிகளின் நன்மைகருதி புகைப்படங்களை பொதுத்தளத்தில் பகிர்வதை முற்றாக்க தவிர்ந்து முன்மாதிரியுடன் திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தகவல் உதவி
ஹிராஸ் முஹம்மது
ஏ.எம்.றபீக்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed