Main Menu

எமக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை – Help Dress Team

இந்த செய்தியைப் பகிர்க >>>

எமக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. வாழ்த்துத்தெரிவிப்பது அவரவர் தனிப்பட்ட விடயமென குறித்த திட்டத்தை முன்னெடுத்த
Help Dress இளைஞர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
Help Dress ஏழைகளுக்கு உடையளிக்கும் திட்டமானது, பலரின் உடல் உழைப்பு, நேர, கால, பொருளாதாரப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பம் தொட்டே எந்தவித அரசியல் பக்கச் சார்பில்லாது, முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

எமது கூட்டு முயற்சியை பலர் வாழ்த்தி இருந்தனர். அது போன்றே அரசியலுடன் நேரடித்தொடர்புள்ளவர்களும் தமது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஆகவே, உயரிய நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட இப்பணியை அரசியலாகப் பார்க்கவோ அரசியலாக்கவோ வேண்டாமென கேட்டுக் கொள்கின்றோம்.

உதவி புரிந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகள் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed