Main Menu

வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களைத் திருடியவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
அண்மைக்காலமாக வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களைத் திருடி வந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, புதுப்பள்ளிப் பகுதியில் வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள் களவாடப்படுவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் தௌபீக் குழுவினர் ஒரு மாத காலமாக நடாத்திய புலன்விசாரணையின் அடிப்படையில் களவாடப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள் சம்மாந்துறை நகரப்பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (22) மீட்கப்பட்டது.

இதே வேளை குறித்த, இயந்திர உதிரிப்பாகங்களைக் களவாடி குறித்த இரும்புக்கடைக்கு விற்பனை செய்த அதே பகுதியைச்சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரொருவர் இன்று கைதாகியுள்ளார். இவ்வாறு கைதான நபர் சம்மாந்துறை வைத்தியசாலையொன்றில் கடமையாற்றிய நிலையில் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்றும். தற்போது ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வருகின்றது.

மேலும், குறித்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்து வரும் பொலிஸார் மேலும் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளாரா? என ஆராய்ந்து வருவதாகவும், அதே சமயம் கைதான சந்தேக நபர் மற்றும் தடயப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நாளை (26) பாரப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed