Main Menu

சவளக்கடை பொலிஸாருக்கு கொரோனா தடுப்பு மருந்து

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத்தொகுதியொன்று சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துத்தொகுதி யாவும் இன்று வெள்ளிக்கிழமை (22) சவளக்கடை பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரபிடம் கல்முனைப்பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் குழுவினர் வழங்கி வைத்தனர். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணனின் பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இம்மருந்துகள் சவளக்கடை பொலிஸாருக்கு வழங்கவென கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கல்முனைப்பிராந்திய ஆயுர்வேத மருத்துவ இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தொற்று சந்தேக நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போருக்கே முதலில் இம்மருந்து வழங்கபட்டது. தற்போது கொரோனா தடுப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களினதும் பொலிஸ் மற்றும் முப்படையினரதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்களது பாவனைக்காக இம்மருந்து விநியோகிக்கப்படுகிறது.

14 மூலிகைகள் அடங்கிய மிகப்பெறுமதியான இந்த ஆயுர்வேத மருந்தானது, பக்க விளைவுகளற்றதும் பயன்மிக்கதுமாகும். இது எமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் செயலிக்கச்செய்து விடக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறது. பொதுவாக உடம்புக்கு நல்ல மருந்தாகும். கடந்த இரண்டு மாதங்களாக நானும் இம்மருந்தைப் பாவித்து வருகின்றேன் எனக்குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed