Main Menu

வெளிநாட்டிலுள்ள சகோதரர்களின் வீட்டுக்கதவுகளை நள்ளிரவில் தட்டிய மனிதாபிமான உதவி : முன்னாள் முதலமைச்சருக்கு பாராட்டு

இந்த செய்தியைப் பகிர்க >>>

வெளிநாடுகளிலுள்ள சகோதரர்களின் நிலைமையறிந்து முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நள்ளிரவில் உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்த நெகழ்ச்சியான சம்பவம் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உலகப்பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் வெளிநாடுகளில் சகோதரர்களும் குறிப்பாக கட்டாரிலுள்ள சகோதரர்களும் தொழில், வருமானம் இழந்து பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையினைக் கருத்திற்கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வெளிநாடுகளிலுள்ள சகோதரர்களின் தகவல்களைப் பெற்று தனது சொந்த நிதியிலிருந்து உலருணவுப்பொதிகளை அவர்களின் காலடிகளுக்கு கொண்டு வழங்கியுள்ளமை பாராட்டுக்குரியது.

கல்குடாவிலுள்ள பள்ளிவாயல்கள், உலமா சபை, பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள், தனவந்தர்கள் எனப்பலர் வாழ்வாதார உதவிகளைப் பரவலாக வழங்கி வந்தாலும், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று அல்லல்படுவோரின் குடும்பத்தினர் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற பரவலான விமர்சனம் முன்வைக்கப்பட்டுகின்றது.

இந்நிலையிலேயே முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஊடாக ஓட்டமாவடி பிரதேசத்தைச்சேர்ந்த வெளிநாடுகளில் தொழில்புரியும் சகோதரர்களின் வீடுகளுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளதுடன், எந்தவொரு விளம்பரப்பலகையோ, புகைப்படமோ, வீடியோவோ எதுவுமேயின்றி இரகசியமான முறையில் வழங்கியமை இன்றைய சூழலில் வியப்புக்குரியதே.

பொதுத்தேவைகளின் போது, நினைவுக்கு வரும் வெளிநாடு வாழ் சகோதர்கள் இவ்வாறான அசாதாரண நிலைமைகளின் போது, கண்டுகொள்ளப்படுவதில்லை. கல்குடாவில் பல அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல்வாதிகள் நிவாரணப்பணிகளை முன்னெடுத்த போதும், அனைவராலும் கைவிடப்பட்ட வெளிநாடு வாழ் உறவுகளையும் கவனத்திற்கொண்டு, அவர்களின் கஷ்டங்களில் சிறிதளவேனும் பங்கெடுத்துக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களின் இச்சேவையைப் பாராட்டுவதோடு, அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் மனோநிலை எம்மைவருக்கும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.

றிபாய்தீன் சிறாஜி
கட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed