Main Menu

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினூடாக உலருணவுப்பொதிகள் விநியோகம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினூடாக உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில், வாகரை, புணாணை கிழக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிட்குபட்ட பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எல்.புஹாரி முஹம்மட் தலைமையில் புனாணை கிழக்கு கிராமத்தில் 30 குடும்பங்களுக்கும், நாவலடி, பாலை நகர், மாவடிச்சேனைக் கிராமத்தில் 85 குடும்பங்களுக்குமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed