Main Menu

கஞ்சாவுடன் 55 வயது நபர் வாழைச்சேனையில் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தில் கஞ்சாவுடன் 55 வயதுடைய நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வாழைச்சேனை போதைத்தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வி.எம்.தாஹா தலைமையிலான பொலிஸாரினால் வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தின் ஹைறாத் வீதியில் வைத்து 210 கிராம் கஞ்சாவுடன் 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோதச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனைத்தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளைக்கைது செய்யும் வகையிலும் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed