Main Menu

வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு தனது பெருநாள் வாழ்த்தினைத் தெரிவிக்கும் அமீர் அலி

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வெளிநாடுகளில் வாழும் எமது சகோதரர்கள் எதிர்வரும் புனித றமழான் நோன்புப்பெருநாளை கொண்டாட எதிர் ல்பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையிலே எனது மனப்பூர்வமான பெருநாள் வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இம்முறை பெருநாள் கொரோனா தொற்றோடு உலகமெங்கும் கட்டுப்பாட்டுக்குள் இருந்து செயற்பட வேண்டிய மிக கட்டாயத்தேவையினை உங்களுக்கு நான் ஞாபகம் செய்து கொள்கின்றேன். நீங்கள் வாழுகின்ற நாட்டினுடைய சட்டத்திட்டங்களை கெளரவப்படுத்தி, மதித்து அதன்படி நீங்கள் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடத்தில் இருக்கின்றது.

விஷேடமாக எமது நாட்டிலுள்ள உங்களது உறவுகள், சொந்தங்கள், எமது பிரதேசத்தில் இருக்கும் எல்லா உறவுகளுக்குமாக நீங்கள் இருக்கும் புனித பிரதேசத்திலிருந்து துஆக்களை அதிகம் செய்து கொள்ளுங்கள்.

மிகுந்த கவலையையும் சுமையினையும் தாங்கியுள்ள நீங்கள் குடும்ப உறவுகளோடு இந்த புனித திருநாளைக்கொண்டாடுவதில் தவிப்பீர்கள் என்பதிலே உங்களில் ஒருவனாக இருந்து நானும் பிரார்த்தனை செய்கின்றேன்.

விஷேடமாக உங்களது குடும்ப மறுமலர்ச்சிக்காகவும், பிரதேசத்தின் கல்வி உயர்ச்சிக்காகவும் உங்களது பிரார்த்தனைகளை அதிகமதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். சகல விடயங்களும் இறைவன் நட்டப்படியே நடக்கும் என ஈமான் கொண்டவர்கள் நாங்கள். அதன்படி எந்த மாற்றமுமில்லாமல் இறைவன் எம் எலோரையும் பாதுகாத்துக்கொள்வான் என நம்புகின்றேன்.

இன்ஷா அல்லாஹ், சந்தர்ப்பம் கிடைக்கின்ற பொழுது தாங்கள் எல்லோரையும் அல்லது தாய் நாட்டுக்கு வருகின்ற பொழுது சந்தித்து முசாபா செய்ய வேண்டுமென்ற ஆசையோடு எதிர்பார்த்து கொண்டிருகின்றேன்… வஸ்ஸலாம்..

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed