Main Menu

காணாமலாக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச்சங்கம் உலருணவுக்கூப்பன்கள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்,முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினூடாக உலருணவுக்கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலருணவுக் கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு செயலகக்கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் திட்ட இணைப்பாளர் அன்ரன் கேபிரியல், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, தெரிவு செய்யப்பட்ட 32 குடும்பங்களுக்கு சதோச விற்பனை நிலையத்தில் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் உலருணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில் மூவாயிரத்து ஐயாயிரம் (3500.00) ரூபாய் பெறுமதியான கூப்பன் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed