Main Menu

இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றில்லை – Dr. ஜி.சுகுணன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து நோய் வாய்ப்பட்டு இறந்ததாக ஒரு இராணுவ வீரரை திருக்கோயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தார்கள். ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்த தருணத்தில் இராணுவத்தினரால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மூச்சு விட சிரமப்பட்டிருந்ததாகவும், நெஞ்சில் பிரச்சினை காணப்பட்டதாகவும் வைத்தியசாலைக்கு இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

எனினும், உண்மையில் அந்த இராணுவ வீரருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்திருக்கலாமென எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவ வீரரின் உடலை நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி மருத்துவ ஆய்விற்காக மாதிரிகளை உரிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தோம் . அந்த அறிக்கையின் அடிப்படையில் இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றில்லையென முடிவு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அங்கு காணப்பட்ட பதற்ற நிலைமைக்கு தெளிவு பிறந்திருக்கிறது.

மேலும், இறந்த இராணுவ வீரர் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த காலங்களில் சேவையாற்றியவர் எனவும், அதற்காக அவருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed