Main Menu

அரச, தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை- Dr. கு.சுகுணன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
வெளி மாவட்டங்களிலிருந்து பணிக்குத்திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லையென கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (23) முற்பகல் இடம்பெற்ற நிலையில், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்,
தனிமைப்படுத்தலில் ஒரு சிறிய விடயத்தை நாம் கூறலாமென்று நினைக்கின்றேன். போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. வெளி மாவட்டங்களிலிருந்து பணிக்குத்திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இருந்த போதிலும், பாதுகாப்பு வலயத்திலுள்ள மாவட்டத்திலிருந்து குறித்த சூழ்நிலையில் வருபவர்கள் தங்களை சுய கட்டுப்பாட்டுடன் பொதுச்சுகாதாரப் பழக்கவழக்கங்களுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed