Main Menu

நாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுங்கள் – பெருநாள் வாழ்த்தில் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி)

இந்த செய்தியைப் பகிர்க >>>

நாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுமாறு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி) விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ் த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நமது தாய் நாடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டு மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நாம் புனித நோன்புப்பெருநாளை அடைந்துள்ளோம்.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகள், சட்டதிட்டங்களையும் மதித்து நாட்டின் பாதுகாப்பையும், நமது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி ஒன்றுகூடல்கள், காளியாட்டங்களைத் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே பெருநாளை மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed